உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 9 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2023-10-24 15:08 IST   |   Update On 2023-10-24 15:08:00 IST
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கடைக்காரர்கள் சாமி கும்பிட்டு விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்
  • சிலர் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்

திருச்சி 

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் பாலத்தின் அடிப் பகுதி கடைவிதியில் செல்போன், மளிகை, பேன்சி ஸ்டோர், டீக்கடை உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த கடைக்காரர்கள் சாமி கும்பிட்டு விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மணிகண்டம் போலீசில் கடையின் உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் இரண்டாவது நாளாக மீண்டும் நாகமங்கலம் அருகில் உள்ள பாத்திமா நகர் கடை வீதியில் உள்ள கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது.

திருச்சி- புதுக்கோட்டை எல்லை பகுதியான பாத்திமா நகர் கடை விதியில் உள்ள சுமார் 9-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் முருகன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம், பொருட்களை திருடி உள்ளனர்.

சுமார் ஒரு லட்சம் ரொக்கம், மற்றும் மளிகை, பேன்சி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்,

இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களும் அடுத்தடுத்து நாட்களில் நடந்து உள்ளது . இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத கடைகளை நோட்டமிட்டு, ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து 2 நாட்கள் பகுதியில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின்.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் திருச்சியில் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்ட காவல் துறையும் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும் பொதுமக்கள், வியபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News