மயக்க மருந்து தடவி நகை, பணம் அபேஸ்
- மணப்பாறை பஸ் நிலையத்தில் மயக்க மருந்து தடவி கரூர் பயணியிடம் நகை பணம் அபேஸ் செயயப்பட்டு உள்ளது
- 3 மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி,
கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் மம் பதையூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார்.அப்போது 3 மர்ம நபர்கள் அருகாமையில் வந்து மயக்க மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த நொடி கன்னியப்பன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அதன் பின்னர் இதுகுறித்து கன்னியப்பன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.