உள்ளூர் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் மரத்தில் பிணமாக தொங்கிய நோயாளி
- ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி.
- மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. (வயது 59). இவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு யாத்திரிநிவாஸ் அருகில் உள்ள ஒரு மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார்பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.