உள்ளூர் செய்திகள்

பிக்பாக்கெட் அடித்த சிறுவன் கைது

Published On 2023-08-19 13:48 IST   |   Update On 2023-08-19 13:48:00 IST
  • கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்
  • ஓடும் பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்

திருச்சி, 

திருச்சி ராம்ஜி நகர் நவலூர் கொட்டப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27).இவர் சென்னை செல்வதற்காக ராம்ஜி நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு டவுன் பஸ்ஸில் திருச்சி மத்திய பஸ் நிலையம் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் ஒரு சிறுவன் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 300 பணத்தை பிக் பாக்கெட் அடித்தான்.இதனை கவனித்து விட்ட கனகராஜ் அந்த சிறுவனை சக பயணிகள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து கன்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில் பிடிபட்டவர், துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.கைதான சிறுவனின் தாய் தந்தை இருவரும் வேறு வேறு நபரை திருமணம் செய்து சென்று விட்டதால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டான். பின்னர் பாட்டி பராமரிப்பில் இருந்து கொண்டு சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.முதல் முறையாக போலீஸ் வசம் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News