விபத்தில் சிக்கி மீண்டவர் திடீர் சாவு
- அரியமங்கலம் அருகே விபத்தில் சிக்கி மீண்டவர் திடீர் என மரணமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
அரியமங்கலம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்த் (வயது 28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி சுந்தரி மீனா திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் நான்காம் தேதி ஜெயந்த் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக திருப்பூர் சென்றார் பின்னர் மோட்டார் சைக்கிளில் திருச்சி திரும்பினார் திருச்சி திம்மராய சமுத்திரம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினர். கடந்த இருபதாம் தேதி மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயந்த் திடீரென இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி மீனா அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.