உள்ளூர் செய்திகள்

தனிப்பிரிவு போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகையில், தனிப்படை போலீசாருக்கு பயிற்சி

Published On 2023-07-24 15:02 IST   |   Update On 2023-07-24 15:02:00 IST
  • பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி.
  • கலவரங்களை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பெருகிவரும் குற்றத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவற்றின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் சென்னை மறுபரிசீலனை சிறப்பு கிளை பயிற்சி பள்ளி உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் , நாகை மாவட்ட தனிப்பிரிவின் போலீசார் அனைவருக்கும் சிறப்பு நுண்ணறிவு பயிற்சியளித்தார்.

மேலும் இச் சிறப்பு பயிற்சியில் தீவிரவாத ஊடுருவலை தடுத்தல், பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி, கோவில் திருவிழாக்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுதல் , சாதிக் கலவரங்கள், மற்றும் மதக் கலவரங்கள் போன்ற நிகழ்வுகளை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News