உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து போலீஸ் நிலையத்தை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
வள்ளியூரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் திறப்பு
- போக்குவரத்து போலீஸ் நிலையத்தை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த போக்குவரத்து போலீஸ் நிலையம் டி.எஸ்.பி. அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது. அதனை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வள்ளியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலை முத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.