உள்ளூர் செய்திகள்

அண்ணா பூங்காவில் பனிமூட்டத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்.

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2022-07-10 08:52 GMT   |   Update On 2022-07-10 08:52 GMT
  • ஏற்காடு தமிழகத்தில் பிரசித் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
  • சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் பிரசித் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஏழைகளின் என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்காட்டிற்கு விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். கடும் பனி பெய்த நிலையிலும் வாகனங்கள் அதிகம் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இன்று பிற்பகலில் லேசான சாரல் மழையும், பனியும் பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் திரளானோர் சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.ஏரிக்கு திரளான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து சென்றனர்.

சாலையோர கடைகளில் விற்பனை சூடு பிடித்தது. லேடிஸ் மற்றும் ஜென்ஸ் சீட் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

Similar News