உள்ளூர் செய்திகள்

அமைச்சர் துரைமுருகன்.

நெல்லையில் நாளை மதுரை மண்டல அளவிலான நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் - அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

Published On 2022-08-31 09:20 GMT   |   Update On 2022-08-31 09:20 GMT
  • பாளை கே.டி.சி. நகரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
  • தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நெல்லை:

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

பாளை கே.டி.சி. நகரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகை செல்கிறார். மதியம் 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

அன்று இரவு நெல்லையில் தங்கும் அமைச்சர் துரைமுருகன் மறுநாள் காலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு பணிகளை பொன்னாக்குடி பகுதியில் ஆய்வு செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வஹாப், ரூபி மனோகரன், ஞான திரவியம் எம்.பி.,மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News