GOLD PRICE TODAY : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை- இன்றைய நிலவரம்
- அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காமல் ஏறத் தொடங்கியது. கடந்த 12-ந்தேதியில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. சென்னையில் கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.96,400 என்று இருந்த நிலையில், 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலை உயர்ந்த போதே தங்க வியாபாரிகள் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று சொன்னார்கள். அது நேற்று முன்தினம் நிஜமாகிப் போனது.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், ஒரே நாளில் நேற்று 'அந்தர்பல்டி' அடித்து விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 222 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,800
15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,120
14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-12-2025- ஒரு கிராம் ரூ.211
15-12-2025- ஒரு கிராம் ரூ.215
14-12-2025- ஒரு கிராம் ரூ.210
13-12-2025- ஒரு கிராம் ரூ.210
12-12-2025- ஒரு கிராம் ரூ.216