உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-08-11 09:40 GMT   |   Update On 2022-08-11 09:40 GMT
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
  • இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நாளை வெள்ளிக்கி ழமை (12-ந் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும்,

மாதத்தின் 2 மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இம்மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை (12-ந் தேதி) காலை 10 மணி அளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News