உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு  கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில்  தர்ப்பணம் கொடுத்தனர்.

இன்று ஆடி அமாவாசை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, ஆறுகளில் தர்ப்பணம்

Published On 2022-07-28 14:20 IST   |   Update On 2022-07-28 14:20:00 IST
  • இன்று ஆடி அமாவாசை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, ஆறுகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.
  • தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். தர்ப்பணம்

கடலூர்:

இறந்த மூதாதையர் களுக்கு தர்ப்பணம் செய்வ–தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய –அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டுமொத்த–மாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும்‌. தர்ப்ப–ணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்ப–ணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை–யையொட்டி கடலூர் தேவ–னாம்பட்டினம், கிள்ளை கடற்கரையிலும், தென்பெண்ணை ஆறு, மணி–முத்தாறு உள்ளிட்ட ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளில் ஏராள–மான பொதுமக்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்த–னர். இந்த நிலையில் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட–னர். 

Tags:    

Similar News