சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்குசேலம் கோட்டத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிக சிறப்பு வாய்ந்தது ஆகும்.
- இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது.
சேலம்:
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது. இதை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து திரு வண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. சேலம் புதிய பஸ் நிலையம், ஆத்தூர் பஸ் நிலையங்களில் திரு வண்ணாமலைக்கு மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்படு கின்றன. இதேபோல் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தர்மபுரியில் இருந்து மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்படுகிறன. இன்று காலை முதலே பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, சித்ரா பவுணர்மியை முன்னிட்டு சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதல் பஸ்க ளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்த்து பக்தர்கள் பஸ்களில் பயணம் செய்யலாம் என்றனர்.