உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் மண்டல கூட்டம்- அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு

Published On 2022-07-09 14:16 IST   |   Update On 2022-07-09 14:16:00 IST
  • நான் அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் என்னை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர்.
  • வெளி நடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் மண்டலகுழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தரம் இந்துஜா பள்ளிக்கான குத்தகை, மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கே.கார்த்திக் பேசுகையில், எனது 7-வது வார்டில் ஹன்சா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பூமி பூஜை போடுவதாக அதிகாரிகள் தரப்பில் எனக்கு அழைப்பு விடுத்தனர்.ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. நான் அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் என்னை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நான் பல மாதங்களாக போராடி கொண்டு வந்த பாதாள சாக்கடைத் திட்டத்தையும் பூஜை போடவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். எனவே வெளி நடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

Tags:    

Similar News