உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சலில் அருள்பாலித்தார்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம், ஊஞ்சல் உற்சவம்

Published On 2022-06-14 15:40 IST   |   Update On 2022-06-14 15:40:00 IST
  • திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
  • சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவ–ர்சாமி, அம்பாள், உறசவர் பெரியநாயகி அம்பாள்ஆகியோருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சா மிர்தம் மற்றும் மூலிகை திரவியங்கள், மூலிகை பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும், நேர்த்திகடனுக்காகவும் கிரிவலம் வந்து சாமி தரி சனம் செய்தனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை–பெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் பெரிய நாயகி ஊஞ்சலில் எழுந்த ருளி சேவை சாதித்தார் பவுர்ணமி உற்சவதாரர் ஏ. வி. குமரன்மற்றும் சிவனடி யா–ர்கள், சிவதொ–ண்டர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

அப்பர் இல்ல அறக்க–ட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் அர்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது.

பவுர்ணமியை முன் னிட்டு பக்தர்களுக்கு மருத்து வம், சுகாதாரம்,குடிநீர், உணவு, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News