உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற கட்டிடம் திறக்கப்படுமா?

Published On 2023-05-14 12:55 IST   |   Update On 2023-05-14 12:55:00 IST
  • பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது
  • புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தரவேண்டும்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் சித்ரசாவடி கேட் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம், ஊர்ப்புற நூலகம் ரேஷன் கடை இயங்கி வருகிறது.

பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊர்ப்புற நூலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், நூலகம் இயங்கவில்லை.

இதனருகிலேயே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

எனவே ஊர்ப்புற நூலகத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை உடனடியாக புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News