உள்ளூர் செய்திகள்
குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வாகனங்களும் செல்ல முடியாமல் அவதி
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பூமிக்கடியில் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
குடிநீர் வீணாகாமல் வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கு ஏற்ப நேரடியாக குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக தெருக்களில் பொக்லைன் எந்திரம் மூலம் நீளமாக பள்ளம் தோண்டப்பட்டதால் அவ்வழியே எவ்வித வாகனங்களும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.