உள்ளூர் செய்திகள்

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் திருத்தேர் உற்சவம்

Published On 2023-02-25 14:57 IST   |   Update On 2023-02-25 14:57:00 IST
  • பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்
  • எராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவவிழா கடந்த 18-ந் தேதி முதல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் புற்று வடிவில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆரா தனைகளும் நடைபெற்றது.

உற்சவ அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் செய்தும், பொங்கலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.

பகல் 2 மணி அளவில் திருத்தேரில் உற்சவ அங்காள பரமேஸ்வரி அம்மனை மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து திருத்தேர் உற்சவத்தை தொடங்கினர்.

விழாவில், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப பிரச்சினை, தொழில் உள்ளிட்டவர்கள் வேண்டுதல் வைத்து வடம் பிடித்து தேர் இழுத்தால் நினைத்தது நிறைவேறும் என்பதால். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News