உள்ளூர் செய்திகள் (District)

மனுக்கள் பெறப்பட்ட காட்சி

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

Published On 2022-06-07 09:53 GMT   |   Update On 2022-06-07 09:53 GMT
  • மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.
  • உடனடியாக தீர்வு காண கலெக்டர் உத்தரவு.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்கடர் பா.முருகேஷ் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.

மேலும், வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் சம்மந்தமாக 42 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 108 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா தொடர்பாக 51 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரி 53 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 3 மனுவும், 61 இதர மனுக்களும், இதர துறையை சார்ந்த மனுக்கள் 14 என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.

மேற்படி பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) எம்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண் உதவி இயக்குநர் கோ.அன்பழகன், திருவண்ணாமலை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் உட்பட பலர் கொண்டனர்.

Tags:    

Similar News