உள்ளூர் செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள்
- திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
- மாணவர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜி. அப்துல்கலாம் நினைவு நாளை ஒட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவருடைய சிறப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் டாக்டர். வி. எம். நேரு, தலைவர் டாக்டர் கணேசன், பொருளாளர் மணி, பள்ளி முதல்வர் மகாதேவன் மற்றும் அறக்கட்டளைதி இயக்குநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.