உள்ளூர் செய்திகள்

செய்யாறு வேதபுரீஸ்வரர் ேகாவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

வேதபுரீஸ்வரர், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

Published On 2023-01-06 10:11 GMT   |   Update On 2023-01-06 10:11 GMT
  • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

செய்யாறு :

செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று காலை ஆருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் பெருமளவில் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தைக்கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி உடனாய தண்டல புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியொட்டி நடராஜர் உற்சவர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த ஆருத்ரா தரிசனத்தை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து சென்றனர்.

Tags:    

Similar News