ஆரணி கோட்டை மைதானத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று விளையாடிய காட்சி.
2 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு போட்டி நடந்தது
- மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்
- 56 அரசு பள்ளிகள் பங்கேற்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டியை உடற்கல்வி ஆசிரியர் ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையாசிரியை தாமரைசெல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில் 14,16,17, வயதுக்குப்பட்ட ஆரணி பெண்கள் மேல்நி லைப்பள்ளி குன்னத்துர் தேவிகாபுரம் வடுகசாத்து உள்ளிட்ட 56 அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டியை ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதில் கபடி வாலிபால் ரிங்பால் பேட்மிண்டன் கால்பந்து கோ-கோ உள்ளிட்ட 11 விளையாட்டு போட்டிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையா டினார்கள்.
இந்த விளையாட்டு போட்டியால் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்ப தாகவும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளதாகவும் அரசு பள்ளி மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.