உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

முருங்கைக்காய்களை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டம்

Published On 2023-07-27 12:41 IST   |   Update On 2023-07-27 12:41:00 IST
  • தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், 22- வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதில் மத்தியஅரசு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே போராட்டத்தில், முருங்கைக்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் முருங்கை காய்களை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு காளிநாதம்பாளையம் சிவக்குமார் தலைமை தாங்கினார். உழவர் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் சின்னச்சாமி, பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மங்கை வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மி ஆட்டம் நடைபெற்றது. ஆசிரியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை நடத்தினார்.இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தை விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News