உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விஷ மாத்திரை சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-06-05 06:44 GMT   |   Update On 2023-06-05 06:44 GMT
  • போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தவர் காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்கோடம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேசன்(வயது 55) என்பதும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது கால் சட்டை பையில் தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News