உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2022-09-03 04:36 GMT   |   Update On 2022-09-03 04:36 GMT
  • இந்து அமைப்புகள் சார்பில் பல்லடத்தில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
  • 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.

பல்லடம் :

பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத மாணவர் பேரவை, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் சுமார் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பல்லடம் வட்டாரப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லடம் கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பொங்கலூர் அருகே உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பிரம்மாண்டமான நடனமாடும் சிவன் சிலை அனைவரையும் கவர்ந்தது. நடனமாடிக் கொண்டே தலையிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News