உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டக் காட்சி.
பல்லடத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி
- பள்ளி வளர்ச்சி குறித்து பயிற்றுநர்கள் பாபு, ஆனந்தஜோதி ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.
- சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் வட்டார வள மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. மேற்பார்வையாளர் அங்கையர்கன்னி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி மற்றும் 17 வார்டு உறுப்பினர்கள், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்றுநர்கள் சாரதா,மாரியப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.மேலும் பள்ளி வளர்ச்சி குறித்து பயிற்றுநர்கள் பாபு, ஆனந்தஜோதி ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.