கோப்புபடம்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்
- மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
- வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை, ஏடிஎஸ்., கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ்., கொசு உற்பத்தி சுழற்சி முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.
கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி தடுப்பு பணிக்கு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.