உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் மின்வாரிய அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2023-06-15 11:03 GMT   |   Update On 2023-06-15 11:03 GMT
  • மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன .
  • தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மண்ணரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மண்ணரை மற்றும் பழைய காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அலுவலர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன . இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிகளில் தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் மின்வெட்டால் மாணவ, மாணவிகளும் பாதிப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த இரவு நேரம் மின்தடையால் அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

அதே போல் கடந்த ஒரு வாரத்தில் அதிக மின் அழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல பொருட்கள் பல வீட்டில் சேதம் அடைந்துள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News