உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ஆனந்த்குமார் சாகுவையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் படத்தில் காணலாம்.

வட மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது - 6 கிலோ பறிமுதல்

Published On 2022-07-08 04:30 GMT   |   Update On 2022-07-08 04:30 GMT
  • தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.
  • ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார்.

திருப்பூர் :

திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, போலீசார் அசோக்குமார், கோபால் ஆகியோர் திருப்பூர் ரெயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், ரெயில் நிலையத்தில் மின்தூக்கிஅருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார். உடனடியாக அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனைசெய்தனர்.

அந்த பைக்குள் 7 பொட்டலங்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவைகடத்தி திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார்.விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் பாலங்கிர் பகுதியை சேர்ந்தஆனந்த்குமார் சாகு (வயது 34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்குமார் சாகுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News