உள்ளூர் செய்திகள்
திட்ட அலுவலர் பிரேமலதா ஆய்வு செய்த காட்சி.
கொண்டம்பட்டி ஊராட்சியில் திட்ட அலுவலர் ஆய்வு
- புகார் மீது உண்மை தன்மை இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா தெரிவித்தார்
- 100 நாள் வேலை உறுதி அளிக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி அளிக்கும் திட்டத்தில், கொண்டம்பட்டி ஊராட்சியில்சுமார் 30க்கும் மேற்பட்டவர்களின் வேலை அளிக்கும் அட்டையை பயன்படுத்தி பல லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் மனு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் பிரேமலதா தலைமையிலான குழுவினர் கொண்டம்பட்டி ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். புகார் மீது உண்மை தன்மை இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட அலுவலர் பிரேமலதா தெரிவித்தார்.