உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அண்ணாபிறந்தநாளையொட்டி உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Published On 2022-09-14 07:58 GMT   |   Update On 2022-09-14 07:58 GMT
  • பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை :

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணா , கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி அண்ணா , ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் பார்வையிட்டனர்.தமிழாசிரியர்கள் சின்னராசு, ரேணுகா, வசந்தி ஆகியோர் நடுவர்களாகச்செயல்பட்டனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, போட்டியை தமிழாசிரியர் ராஜேந்திரன், கலை ஆசிரியர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் தலா 5 பேர் திருப்பூரில் நாளை 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர்.

Tags:    

Similar News