உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெப்பத்தின் தாக்கத்தால் படையெடுக்கும் பாம்புகள் - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்

Published On 2023-03-28 10:58 GMT   |   Update On 2023-03-28 10:58 GMT
  • கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது.

திருப்பூர் :

மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதி களில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விடும். குளிர், மற்றும் மழைக்காலங்களில் பதுங்கி கிடக்கும் பாம்புகள் வெயில் காலம் அதற்கு ஏற்ற காலம் என்பதால் வசிப்பிடங்களில் எளிதாக வந்து செல்லும். இரவு நேரங்களில் மனிதர்கள் மிதித்துவிட்டாலோ அல்லது அதன் அருகில் சென்று விட்டாலோ அது தனது சுய பாதுகாப்புகாக கடித்து விடுகிறது. வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகை யில்;- கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அடி க்கடி பராமரித்து வைத்தி ருக்க வேண்டும்.. கூடிய வரைக்கும் செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்தி ருப்பதை தவிர்ப்பது நல்லது. சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது. குழித்தோண்டி அதில் புதைத்து விட வேண்டும். இரவு நேரம் மின்விளக்குகள் எரிய வேண்டும்.

பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்த த்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதனை செய்ய கூடாது. காலம் பொன் போன்றது என்பது பாம்பு கடித்தவருக்கு தான் பொருந்தும். பாம்பு கடிப்ப ட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது. பெரும்பாலான தனியார் மருத்துவமனை களில் பாம்பு கடி மருந்துகள் இருப்பதில்லை.

இயற்கை மருத்துவம் எனும் பெயரில் பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தா தவை மட்டு மல்ல, உண்மை யும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

எந்த வகை பாம்பு கடித்தது என்பதை மருத்து வர்களுக்கு தெரியப்படுத்து வதற்காக அந்தப்பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒரு வேளை அப்படி கட்டப்ப ட்டால் ,அந்தக்கட்டு அக ற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவ மனைகள், மருத்துவக்க ல்லூரி மருத்துவமனை கள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டி ருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிக மாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் விஷம் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்.

கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்து வதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெ ன்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்பு கடிக்கு எதிராக வழங்க ப்படும் மருந்து ஒன்றுதான் கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனி ல்லை என்பதையும் தாண்டி அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பத ற்கும் கயிறு கட்டப்படுவது வழி வகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணு க்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம் என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கோபால கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்பு க்கடி மரணத்துக்கு காரண மாக உள்ளன.

ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக கடி பட்ட இடத்தில் இறுக்க மான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்க மாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்க மாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றை கிழித்து பயன்படுத்தலாம். கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பார ம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளை விக்க கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூ டாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்க ப்பட்டவரை இடது பக்க மாக ரெக்கவரி பொசி ஷனில் படுக்க வைக்கவும். மேலும் பாம்பு கடிப்பட்ட வரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர் மனப்பயத்தை போக்க வேண்டும். வாகன வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் என்றால் அரசு ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி பாம்பு கடித்து 1 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை மேற்கொ ண்டால் பாம்பு கடிப்பட்ட வர் உயிரை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News