உள்ளூர் செய்திகள்

தன்னார்வ ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி வழங்ப்பட்ட காட்சி. 

தன்னார்வ ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

Published On 2023-03-02 10:38 GMT   |   Update On 2023-03-02 10:38 GMT
  • முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
  • உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

திருப்பூர் :

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக செயல்முறை வாயிலாக புதிய பார்த எழுத்தறிவுத் திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை வலுவூட்டும் வகையில் வாழ்வியல் திறன் பயிற்சி திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது.

பயிற்சியில் சைபர் கிரைம் துணை ஆய்வாளர் சையது சிக்கந்தர், சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்தார். சமூக நலத்துறை மாவட்ட களப் பொறுப்பு அலுவலர் மைதிலி கணேசன் , முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார். வக்கீல் கே. ஆர். ராஜசேகரன் மற்றும் வக்கீல் திங்களவள் ஆகியோர் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்கினர். மேலும் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆசிரியர்கள் மூலமாக உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் அலிமா பீவி மற்றும் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News