உள்ளூர் செய்திகள்

அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சி

Published On 2022-11-13 08:26 GMT   |   Update On 2022-11-13 08:26 GMT
  • இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பிரபல விஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட்பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் அறிவியலாளரும், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பிரபலவிஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே மனித உடல்உறுப்புகள்,மனிதசெல் பயன்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் நாம்எதிர்கொள்ளும் சவால்கள் , புவி வெப்ப மயமாதல், உலகை ஆளும்அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

முன்னதாகப் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் மாணவி கரிஷ்மா மன்ஷாரமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News