உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊதிய உயர்வு - இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-04-17 07:31 GMT   |   Update On 2023-04-17 07:31 GMT
  • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
  • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News