உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விண்கற்களை கண்டறிய ஆய்வு- மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

Published On 2022-08-25 07:25 GMT   |   Update On 2022-08-25 07:25 GMT
  • உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
  • நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

உடுமலை :

சர்வதேச விண்கற்கள் கண்டறியும் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறைகளுடன் இணைந்து விண்வெளியில் உள்ள விண்கற்களை கண்டறிய ஆய்வு நடத்துகிறது.

மாதம்தோறும் நடத்தப்படும் இந்த ஆய்வில், ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.அதன்படி கடந்தாண்டு, இரு முறை உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். இதேபோல நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வில் பங்கேற்கலாம்.தகவல் அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற வாட்ஸ்ஆப் எண், galilioscienceclub@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News