உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி குமரன் பெயர் சூட்ட கோரிக்கை

Published On 2022-08-13 07:27 GMT   |   Update On 2022-08-13 07:27 GMT
  • திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் 23 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சி முடிந்த பின் பெயர் பலகை அகற்றப்பட்டது.

திருப்பூர் :

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்தும் வகையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் 23 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு தற்காலிகமாக ரெயில் நிலைய பெயர், திருப்பூர் தியாகி குமரன் ரெயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் பெயர் பலகை அகற்றப்பட்டது.

இந்நிலையில் சதானந்தம், சிவானந்தம், கணேசன், நிர்மல்ராஜ் உட்பட திருப்பூர் குமரன் வாரிசுகள் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி குமரன் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி., சுப்பராயன், சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News