உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ரேஷன் கார்டுகளில் குழந்தைகளின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுகோள்

Update: 2022-07-04 11:40 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
  • மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில், கூட்டுறவு சங்கம் சார்பில் 22 கடைகள், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 773 முழு நேரம் மற்றும் 326 பகுதி நேர கடைகள், மகளிர் குழுவினர் நடத்தும் 14 கடைகள், 77 நகரும் ரேஷன் கடைகள் என 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள்,5லட்சத்து 23 ஆயிரத்து 814 முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் என, 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் பயன்பெற்று வருகின்றனர்.

பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள, அனைவரும்ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். குழந்தைகள் இருந்தாலும் பிறப்பு சான்றிதழை கொண்டு, பெயர் சேர்த்துவிடலாம். ஆனால் அடுத்த ஓராண்டுக்குள், ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் ஆதார் இணைக்காதபட்சத்தில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில்குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்து, அந்த விவரங்களை பொது வினியோக திட்டத்தில் இணைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆதார் எண் இணைக்கப்படாத சிறுவர் -சிறுமியர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவாக ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 15 ஆயிரம் சிறுவர் -சிறுமியர் ஆதார் இல்லாமல்ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ளனர். 7 வயது வரையில் பெற்றோரின் 'பயோமெட்ரிக்' அடிப்படையில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறலாம். அதற்கு பிறகு குழந்தைகளின் 'பயோமெட்ரிக்' பதிவு செய்யப்படும்.இதுவரை விடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் சிறுவர் -சிறுமியருக்கு ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News