உள்ளூர் செய்திகள்

வட்டமலைக்கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காட்சி.

பாசனத்திற்காக வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2022-07-14 06:32 GMT   |   Update On 2022-07-14 06:32 GMT
  • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் பாசன பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
  • தமிழக செய்தி துறை அமைச்சர் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வெள்ளகோவில் :

‌வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் பாசன பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக வட்டமலைக்கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் முறையாக இந்த ஆண்டு மே மாதம் திறந்து விடப்பட்டது.தற்போது மூன்றாவது முறையாக விவசாய பாசனத்திற்கு மற்றும் குடிநீருக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்முருகானந்தன், வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சி.பாலபூபதி, வட்டமலைக்கரை ஓடை அணையின் இளநிலை பொறியாளர் சிவசாமி மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News