உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவினாசியில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2022-09-07 04:54 GMT   |   Update On 2022-09-07 04:54 GMT
  • கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம் தங்க நகை திருடப்பட்டது.
  • ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு.

அவினாசி :

அவினாசி ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப். இவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதே போல் கடந்த 2மாதத்தில் அவினாசி மங்கலம் ரோட்டில் நடந்து செனற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.அவினாசி கமிட்டியார் காலனியில் பட்டப்பகலில் சாமிநாதன் மற்றும் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம், தங்க நகை திருடப்பட்டது.

கமிட்டியார் காலனி மணிகண்டன் என்பவரது வீட்டில் பணம்- நகை திருட்டு, ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு, அவினாசி மங்கலம் ரோட்டில் அதிகாலையில் வாசலில் கோலம்போட்டுகொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு, நடுவச்சேரியில் பெண்ணின் வீட்டு பூட்டு உடைத்து திருட்டு என தொடர்ந்து அவினாசி வட்டாரத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திருட்டு கும்பல்பகல் நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து செல்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

எனவே குற்றவாளிகளை பிடிக்க எஸ். பி., உத்தரவின்பேரில் தனிப்படையினர் திருப்பூர், அவினாசி சுற்றுவட்டார பகுதி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு முக்கிய வீதிகளில் சி.சி.டி.வி.கேமரா பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளியூர் செல்பவர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News