போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை படத்தில் காணலாம்.
பல்லடம் அருகே அங்கன்வாடி பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற கோரி போராட்டம்
- ஊராட்சி நிர்வாகம் மூலம் புதிய அங்கன்வாடி மையம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
- தொழிற்சங்க கட்டிடத்தில் போதிய அடிப்படைகள் வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமி கவுண்டம்பாளையம் புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதன் அருகே உள்ள தொழிற்சங்க அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதிய அங்கன்வாடி மையம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இன்னும் சில தினங்களில் அங்கன்வாடி கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சங்க கட்டிடத்தில் போதிய அடிப்படைகள் வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் சிலர் நேற்று அங்கன்வாடி மையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆகியோர் அங்கிருந்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.