உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - அவிநாசி கூட்டத்தில் முடிவு

Published On 2022-08-24 11:18 GMT   |   Update On 2022-08-24 11:18 GMT
  • பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளது.
  • விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும்.

அவிநாசி :

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் அவிநாசி சி .ஐ. டி. யு. அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எம் . சந்திரன், மாநில பொருளாளர் எம். அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் பெறும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது காரணமாக பெரும் போராட்டங்களுக்கு பின்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்பொழுது பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.. 15,000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் நெருக்கடியும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் உருவாகியுள்ளது.

இதில் ஒன்றிய அரசும் மாநில அரசும் உடனடியாக தலையிட்டு பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மசோதாவால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும். கைத்தறி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மின்சாரம் தனியாருக்கு வழங்கப்படும்.

அதேபோல மின்சாரத்துறையில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகவே ஒன்றிய அரசு இந்த சட்டத்தின் முன் வடிவை திரும்ப பெற வேண்டும். அதே போல தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 5 முதல் 10ந் தேதி வரை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News