உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-08-10 06:24 GMT   |   Update On 2022-08-10 06:24 GMT
  • கோவை கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர்.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உடுமலை :

உடுமலை ஸ்கூல் ஆப் கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஸ்ரீ ஹரி நாராயணா திருமணமண்டபத்தில் நடந்தது.பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், குற்றவியல் மாஜிஸ்திரேட் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னதாக கராத்தே பயிற்சியாளர் அருள்குமார் வரவேற்றார். போட்டியை, நகராட்சித்தலைவர் மத்தீன், டி.ஆர்.ஓ., ஜஸ்வந்த்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்படி 10 முதல் 11 வயது மாணவிகள் சண்டை பிரிவில் ஜெய்சாய்ஸ்ரீ முதலிடம், அக்சயா இரண்டாமிடம், ஹர்சாஸ்ரீ மூன்றாமிடம் வென்றனர்.இதேபோல 11 வயது மாணவர் சண்டைப்பிரிவில் ஜெய்ஆதித்யா முதலிடம், அஸ்வின்ராஜ் இரண்டாமிடம், அபிேஷக் மூன்றாமிடம் பெற்றனர். குறிப்பாக, கோவை ஹாயாஷிகா கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.வக்கீல் சிதம்பரசாமி, செவ்வேல், டாக்டர் வாசுதேவன், உடுமலை ராயல்ஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் யோகானந்த், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரதீபா நன்றி கூறினார்.

Tags:    

Similar News