உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ செந்தில்நகர் பகுதி பொதுமக்கள் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசனிடம் மனு அளித்த காட்சி. 

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இடுவாய் செந்தில்நகர் பொதுமக்கள் மனு

Published On 2022-07-27 04:20 GMT   |   Update On 2022-07-27 04:20 GMT
  • ஸ்ரீ செந்தில் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • ஸ்ரீ செந்தில் நகர் பகுதிக்கு தார்சாலை, குடிநீர், சாக்கடைகால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் அருகே ஸ்ரீசெந்தில் நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீ செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து இடுவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசனிடம் ஸ்ரீ செந்தில் நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீசெந்தில் நகர் பகுதிக்கு தார்சாலை வசதி,குடிநீர் வசதி,சாக்கடைகால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.மேலும் ஸ்ரீ செந்தில்நகர் பிரிவு அருகே வளைவுப்பகுதியில் வேகத்தடை அமைத்துத்தர வேண்டும்.ஸ்ரீ செந்தில் நகர் பகுதியில் உள்ள் ஸ்ரீ காரியசித்தி விநாயகர் கோவிலுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரியும் கோரிக்கை மனுவை வழங்கினர்.

பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன்,ஸ்ரீ செந்தில்நகர் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News