உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி - எம்.எல்.ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்

Published On 2022-07-13 11:02 GMT   |   Update On 2022-07-13 11:02 GMT
  • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News