உள்ளூர் செய்திகள்

கேரளா மாநில லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்த காட்சி.

பல்லடத்தில் இருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு சென்ற லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

Published On 2023-05-13 07:25 GMT   |   Update On 2023-05-13 07:25 GMT
  • நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
  • ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News