பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
பல்லடத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- ஆலூத்துபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்து பாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில், நீர்மட்டம் குறைந்தும், சில ஆழ்குழாய் கிணறுகள் நீர் வற்றிவிட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் தண்ணீரை அனைத்து பகுதி களுக்கும் வழங்குவதற்காக, குறைந்த அளவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதுமான தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.
இதனால் பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.