உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குர்லா எக்ஸ்பிரஸ் தாமதத்தால் பயணிகள் அவதி

Published On 2022-08-10 10:41 GMT   |   Update On 2022-08-10 10:41 GMT
  • கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்படும்.
  • ரெயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

திருப்பூர் :

பின்னலாடை நகரான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் அதிக அளவில் ெரயில் மூலமாகவே தங்களது சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம், அனந்தபூர், மந்திராலயம் ரோடு, ராய்ச்சூர், கங்காபூர் ரோடு, சோலாப்பூர், பூனே வழியாக லோகமான்ய திலக் வரை இந்த ெரயில் செல்லும். இந்த ெரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

வடமாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணத்தால்இந்த ரெயிலுக்கான இணைப்பு ெரயில் வருவதில் தாமதமானது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ெரயில் இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 2.45 மணிக்கு வந்து 2.47 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 13 மணி நேரம் தாமதம், நேற்று முன்தினம் 3½ மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ெரயிலில் கோவையில் இருந்து திருப்பூருக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். ரெயில் தாமதத்தால் தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  

Tags:    

Similar News