உள்ளூர் செய்திகள்

மருதாசலம்.

திருப்பூர் கோவில்களில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய முதியவர் கைது

Published On 2022-09-10 07:18 GMT   |   Update On 2022-09-10 07:18 GMT
  • துணை ஆணையா் அபினவ்குமாா் மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
  • கோவில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

திருப்பூர் :

திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகம், தென்னம்பாளையம் காலனி சக்தி விநாயகா் கோவி வளாகம், கே.எம்.ஜி.நகா் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் கடந்த 6-ந்தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது.

இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (வடக்கு சரகம்) அபினவ்குமாா் மேற்பாா்வையில் உதவி ஆணையா்கள் பி.என்.ராஜன், கண்ணையன் ஆகியோா் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினா் சம்பவம் நடைபெற்ற கோவில்களில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனா்.இதில் திருப்பூா் வெள்ளியங்காடு திரு.வி.க.நகரைச் சோ்ந்த மருதாசலம் (வயது 62) சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருதாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தாா்.சிலைகளை சேதப்படுத்திய நபரை 48 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை பொதுமக்கள்- போலீஸ் அதிகாரிகள் பாராட்டினா்.

Tags:    

Similar News