உள்ளூர் செய்திகள்

போலீசார் இருதரப்பினிடையே பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

பல்லடம் அருகே வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு

Published On 2023-06-15 13:30 IST   |   Update On 2023-06-15 13:30:00 IST
  • கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
  • 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 48) .இவர் கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் சுமார் 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாகவும், கொரோனா காலகட்டத்தில் சரியாக வியாபாரம் நடக்காததால் பணத்தை திருப்பி கட்ட முடியாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வங்கி நிர்வாகத்தினர் நிலத்தை கையகப்படுத்த வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தனபால் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த, திருப்பூர் மாவட்ட போலீஸ் இணை சூப்பிரண்டு முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் இருதரப்பினிடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஆவணங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News